தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் GOD KEEPS HIS WORD வெள்ளிக்கிழமை, மார்ச் 28, 1958 மிடில்டவுன் உயர்நிலைப்பள்ளி, மிடில்டவுன், ஓஹியோ, அமெரிக்கா. 1. ... ஜெபத்திற்காக சற்று நேரம் நின்ற வண்ணமாய் இருப்போம். 2. ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தாவே, காவல் கிடங்கு, அக்கினி ஜுவாலை, பட்டயம் ஆகியவற்றிற்குப் பதிலாக, எங்கள் பிதாக்களின் விசுவாசம் இன்னும் ஜீவித்துக் கொண்டு இருப்பதற்காக, உமக்கு நன்றி கூறும்படி, நாங்கள் நன்றியுள்ள இருதயங்களோடு, உமது சமூகத்தில் நாங்கள் தலையைத் தாழ்த்துகிறோம். இவை எல்லாம் இருந்த போதிலும், எங்கள் முற்பிதாக்களுக்கு (forefathers) ஒப்புவிக்கப்பட்ட அந்த மகத்தான விசுவாசம் இன்னுமாக அவர்களுடைய பிள்ளைகளிடத்தில் ஜீவிக்கிறது; நாங்கள் அதற்காக மிகவும் சந்தோஷம் உடையவர்களாக இருக்கிறோம். இப்பொழுது, இன்றிரவு நீர் எங்களை ஒரு மகத்தான விதத்தில் ஆசீர்வதிக்க வேண்டுமென்று நாங்கள் வேண்டிக்கொள்ளுகிறோம். எங்கள் மேல் வரும் உமது ஆசீர்வாதங்களுக்காக நாங்கள் தாழ்மையோடு காத்துக் கொண்டிருக்கையில், நாங்கள் எங்களையும், இந்த ஆராதனையையும் உம்மிடம் ஒப்புவிக்கிறோம், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில். ஆமென். 3. நீங்கள் உட்காரலாம். 4. எனக்கு சற்று தாமதமாகி விட்டது. நான் செயின்ட் லூயிஸில் ஒரு அவசர கால நிலைமைக்காக காவல்துறை என்னை அழைத்திருந்தார்கள். 5. சகோதரன்.வேயில், இன்றிரவு சற்று நேரம் அவரைப் பேச அனுமதிக்கும்படி அவர் விரும்பினார். அதன் பிறகு, நாளைக்கு என்னுடைய மனைவியையும் பிள்ளைகளையும் அழைத்துவரும்படி, ஆராதனைக்குப் பிறகு உடனடியாக என்னுடைய வீட்டிற்கு நான் திரும்பிச் செல்கிறேன், ஆராதனைகளை முடித்து வைக்கும்படியாக அவர்களைத் திரும்ப கொண்டு வரும்படிக்குப் போகிறேன். 6. மேலும் இப்பொழுது, நம்முடைய பிரியமான, அன்பிற்குரிய சகோதரனாகிய வேயில் அவர்கள் எப்படிப்பட்ட ஒரு மகத்தான தலைசிறந்த செய்தியைக் கொண்டு வந்தார் என்பதில் சந்தேகமில்லை. மேலும் இப்பொழுது, அவர் என்ன கூறினாரோ அதனோடு நான் எதையும் கூட்ட முயற்சிக்க விரும்ப மாட்டேன், ஆனால் ஜெப வரிசையை அழைப்பதற்கு சற்று முன்பாக, நான் வெறுமனே ஒரு வேத வாக்கியத்தை வாசித்து,.. வரிசையில், ஒரு சில வார்த்தைகளை கருத்துக்களாகத் தெரிவிக்க விரும்புகிறேன். நான் சென்ற இரண்டு அல்லது மூன்று மணி நேரங்களில், மிக மோசமாக தொல்லைக்கு உள்ளானேன், எனவே நாம் ஆரானைக்குள் வரத் துவங்கும் முன்பாக, ஆவியானவரைக் குறித்த உணர்வை நான் என்னில் நானே பெற்றுக் கொள்ள விரும்பினேன். 7. நாளை இரவு, தேவனுக்குச் சித்தமானால், நான் வல்லமையுள்ள ஜெயவீரர் என்ற பொருளின் பேரில் பிரசங்கம் பண்ண விரும்புகிறேன், அவர் திரையை இரண்டாகக் கிழித்தது முதற் கொண்டு. இப்பொழுது, சுவற்றின் மேல் எழுதப்பட்ட கையெழுத்து என்பதின் பேரில் பேசுவதாக நான் வாக்குக்கொடுத்து இருந்தேன், ஆனால் பிரசங்கம் செய்வதற்கு சற்று கரகரப்பான குரலை உடையவனாயிருக்கிறேன், எனவே, நான் அதைக் கடந்து செல்ல வேண்டியதாகிவிட்டது, நான் நினைக்கிறேன், அந்நேரத்தில். ஏனென்றால், அது மிகவும் நீளமான செய்தியாக இருக்கிறது, அது 45 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை ஆகக்கூடிய ஒரு பொருளாக இருக்கிறது, அதைப் போதிக்கும் விதத்தில் கர்த்தர் ஆசீர்வதிப்பாரானால். 8. ஆகையால், எனக்கு ஒரு மோசமான சளி இல்லை, அது வெறுமனே, இந்த 8 ஆராதனைகள், 8 எழுப்புதல்கள், வருடத்தின் ஆரம்பம் முதற்கொண்டு, தொடர்ந்து போய்க் கொண்டே sருக்கின்றதே என்று சற்று முன்பு சிந்தித்துக் கொண்டிருந்தேன். ஒரு நாளே கடினமாக இருக்கும், ஆனால் எப்போதுமே ஒரு கூட்டத்தில் போதிக்கப்படுவது இருக்கிறது, சில சமயங்களில் ஒரு நாளுக்கு இரண்டு அல்லது மூன்று தடவைகள் நடக்கின்றன. எனவே, அது உங்கள் சத்தத்தை சற்றே பலவீனமாக ஆக்கி விடுகிறது. 9. இந்த ஆராதனைக்குப் பிறகு, எனக்கு வெறுமனே ஒரு சிறு ஆராதனை இருக்கிறது. கொஞ்ச நேரம் இளைப்பாறும்படி ஈஸ்டர் ஞாயிறு தான் என்னுடைய பிறந்த நாள். நாம் பார்க்கலாம், நான் 1909-ம் ஆண்டு பிறந்தேன், அது தான் என்னை 25, அல்லது அதைப் போன்ற ஏதோ ஓன்றாக ஆக்கிவிடுகிறது, ஞாயிற்றுக்கிழமை. எனவே, நான் ஒரு பழைய வீட்டிலிருக்கிற வெறும் ஒரு பையன் தான், ஆனால், நான்... சில காலமாகவே, அது ஈஸ்டர் ஞாயிறு வருவது இதுவே முதல் முறையாகும். எனவே, ஈஸ்டர் சூரியோதய ஆராதனைக்காக, என்னுடைய வசிப்பிடமாகிய, ஜெபர்ஸன்வில்லில் இருக்கிற என்னுடைய சிறு கூடாரத்தில் இருக்கப் போகிறேன். அதற்குப் பிறகு உடனடியாக, ஒரு ஞானஸ்நான ஆராதனையும், பிறகு செய்தியும் சுகமளிக்கிற ஆராதனையும் இருக்கிறது. 10. இன்றிரவு இங்கே கேட்டுக் கொண்டிருக்கும் நம்முடைய கூட்டத்தினரிடத்தில், அமர்ந்து கொண்டு இருக்கும், எங்கள் மேய்ப்பராகிய, சகோதரன் நெவில் அவர்கள் அறிமுகப் படுத்தப்பட்டு விட்டார்கள் என்று நிச்சயம் உடையவனாய் இருக்கிறேன். இப்பொழுது, ஜெபர்ஸன்வில்லில் எங்களுக்கு இருக்கிற ஐக்கியம் இந்த விதமாகத்தான் இருக்கிறது: சகோதரன் நெவில் அவர்கள் ஆஸ்பரி கல்லூரியிலிருந்து வந்த ஒரு மெதோடிஸ்டு பிரசங்கியாராக இருக்கிறார், நான் ஒரு பாப்டிஸ்டு. எனவே, எங்களுக்கு உண்மையான நல்ல ஐக்கியம் உண்டாயிருக்கிறது, இல்லையா, சகோதரன் நெவில்-? அது சரியே. நான் பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு பாப்டிஸ்டாக இருக்கிறேன். சகோதரன் நெவில் அவர்களோ பரிசுத்த ஆவியைப் பெற்ற ஒரு மெதோடிஸ்டாக இருக்கிறார். எனவே, தேவனுடைய குமாரனாகிய, இயேசு கிறிஸ்துவின் இரத்தமானது எல்லா அநீதியிலுமிருந்து எங்களைச் சுத்திகரிக்கையில், அது எங்களை சகோதரர்களாக ஆக்கி, நாங்கள் ஒருவரோடு ஒருவர் ஐக்கியத்தைக் கொண்டு இருக்கிறோம். 11. இன்றிரவு ஆசீர்வதிக்கப்பட்ட வேதாகமத்தில், லூக்கா புத்தகத்தில், நாம் 2-வது அதிகாரம், 25- வது வசனம் தொடங்கி, ஒரு சில வசனங்களை வாசிப்போம். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) அப்பொழுது சிமியோன் என்னும் பேர் கொண்ட ஒரு மனுஷன் எருசலேமில் இருந்தான்; அவன் நீதியும் தேவபக்தியும் உள்ளவனாயும், இஸ்ரவேலின் ஆறுதல் வரக் காத்திருக்கிறவனாயும் இருந்தான்; அவன் மேல் பரிசுத்த ஆவி இருந்தார். கர்த்தருடைய கிறிஸ்துவை நீ காணுமுன்னே மரணமடையமாட்டாய் என்று பரிசுத்த ஆவியினாலே அவனுக்கு அறிவிக்கப்பட்டுமிருந்தது. அவன் ஆவியின் ஏவுதலினால் தேவாலயத்திலே வந்திருந்தான். இயேசு என்னும் பிள்ளைக்காக நியாயப்பிரமாண முறைமையின்படி செய்வதற்குத் தாய் தகப்பன்மார் அவரை உள்ளே கொண்டு வருகையில், அவன் அவரைத் தன் கைகளில் ஏந்திக் கொண்டு, தேவனை ஸ்தோத்தரித்து: ஆண்டவரே, உமது வார்த்தையின்படி உமது அடியேனை இப்பொழுது சமாதானத் தோடே போகவிடுகிறீர்; புறஜாதிகளுக்குப் பிரகாசிக்கிற ஒளியாகவும், உம்முடைய ஜனமாகிய இஸ்ரவேலுக்கு மகிமையாகவும், தேவரீர் சகல ஜனங்களுக்கும் முன்பாக ஆயத்தம் பண்ணின சகல உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது என்றான். அவரைக் குறித்துச் சொல்லப்பட்டவைகளுக்காக யோசேப்பும் அவருடைய தாயாரும் ஆச்சரியப்பட்டார்கள். பின்னும் சிமியோன் அவர்களை ஆசீர்வதித்து, அவருடைய தாயாகிய மரியாளை நோக்கி: இதோ, அநேகருடைய இருதய சிந்தனைகள் வெளிப்படத்தக்கதாக, இஸ்ரவே(லி)ல்... விழுகிறதற்கும் எழுந்திருக்கிறதற்கும், விரோதமாகப் பேசப்படும் அடையாளமாவதற்கும், இவர் நியமிக்கப்பட்டிருக்கிறார். 12. தேவன் தம்முடைய வார்த்தையைக் காத்துக்கொள்கிறார் என்ற பொருளில், இக்கூட்டத்தில் என் மேல் ஆவியானவரை உணரும்படிக்கு நான் இப்பொழுது சற்று நேரம் எடுத்துக் கொள்ள விரும்புகிறேன். 13. நாம் நிச்சயமாகவே இளைப்பாறக்கூடிய ஒரு காரியம் தான் உண்டு, அது தேவன் தம்முடைய வார்த்தைகள் ஒவ்வொன்றையும் காத்துக் கொள்கிறார் என்பது தான். அவர் அவைகளை நிறைவேற்றும்படியாக இரவும் பகலும் அவைகள் மேல் கண்ணை வைத்து மேற்பார்வை செய்து கொண்டேயிருக்கிறார் (watches over). அவர் செய்த ஒவ்வொரு வாக்குத் தத்தமும் உண்மையாக இருக்கிறது. நாம் வார்த்தையிலிருந்து எதை வாசிக்கிறோமோ, அதை எல்லாவற்றிற்கும் போதுமானவராகிய தேவன் அந்த வார்த்தையைக் காத்துக் கொள்வார் என்பதை நாம் அறியும் போது, அது நமக்கு அவ்வளவு ஆசீர்வதிக்கப்பட்ட ஒரு நம்பிக்கையைக் கொடுக்கிறது. அதில் ஒரு சிறு எழுத்தாகிலும், ஒரு எழுத்தின் உறுப்பாகிலும் தவறிப்போகாது. மற்றவர்கள் அவரை அவருடைய வார்த்தையில் எடுத்துக் கொண்ட இடங்களை நாம் வாசிக்கையில், சில சமயங்களில் அது மிகவும் இக்கட்டாகத் தோன்றி, சில நேரங்களில், அது தவறிப் போகப் போவது போலத் தோன்றினாலும், ஆனால் அது சற்றும் தவறிப் போகாமல் இருப்பதைக் காணும் போது, அது என்னவொரு பரிபூரண நம்பிக்கையாக இருக்கிறது. 14. நான் சற்று முன்பு, எபிரேய பிள்ளைகளைக் குறித்து சிந்தித்துக் கொண்டு இருந்தேன், அவர்கள் அந்த அக்கினி சூளைக்குள்ளே போன போது, வெளித்தோற்றத்தில், தேவன் அவர்களை ஏமாற்றமடையச் செய்யப் போகிறாரோ என்று தான் இருந்தது, ஆனால் அவரால் தவறிப் போகவே முடியாது. 15. நம்முடைய வேதவாக்கியத்தில், சிமியோன் ஆலயத்தில் இருந்த ஒரு வயதான சாதுவாக (sage) இருந்தான்; அந்த மனிதனுக்கு நற்பெயர் இருந்தது, அந்த நற்பெயர் தான் தேசம் கொடுத்த நன்மதிப்புகளாக இருந்தது. ஒரு மனிதன் சிமியோன் புரிந்த அந்த உத்தியோகத்தை வகிக்கும்படி, அவன் நிச்சயமாக குற்றமற்றவனாகக் காணப்பட வேண்டும், மேலும் அவன் கட்டாயம் உளவியல் ரீதியாக சரியாகக் காணப்பட வேண்டும். அவன் நிச்சயம் விழிப்புடனும் கற்றுத் தேர்ந்தவனாகவும், பரிபூரண ஆவிக்குரிய நிலையிலும் இருந்தாக வேண்டும், ஆசாரியன் குற்றமற்றவனாக இருந்தான். இந்த வயோதிபனுக்கு ஏறக்குறைய 85 வயது, ஒரு நாள் பரிசுத்த ஆவியானவர் அவன் மேல் வந்து, அவன் கர்த்தருடைய கிறிஸ்துவைக் (Lord's Christ) காணும் வரை, அவன் மரணத்தைக் காணப்போவதில்லை என்று அவனுக்கு வெளிப்படுத்தினார். 16. இப்பொழுது, ஜனங்கள் தன்னுடைய சாட்சியை எவ்வாறு கொண்டு செல்கிறார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? மரிக்க ஆயத்தமாக இருக்கும் ஒரு வயதான மனிதன், இன்னுமாக, அவன் கிறிஸ்துவைக் காணும் மட்டுமாக, அவன் மரிக்கப் போவதில்லை என்று கூறுகிறான். தாவீது கிறிஸ்துவை எதிர்நோக்கினான். எலியா அவருக்காக எதிர் நோக்கினான். தீர்க்கதரிசிகள் எல்லாருமே அவரை எதிர் பார்த்து இருந்தார்கள். இராஜாக்களும், சக்கரவர்த்திகளும், பெரும் அதிகாரம் படைத்தவர்களும், இஸ்ரவேலின் எல்லா மகத்தான மனிதர்களும் இந்த மேசியாவுக்காக எதிர்நோக்கி இருந்தார்கள். அவர் எப்பொழுதைக் காட்டிலும் அப்பால் அதிகத் தூரமாக இருந்ததைப் போன்று காணப்பட்டது. அவர்கள் ரோம சாம்ராஜ்யத்தின் கீழ் சேவித்து வந்தனர்; அவர்களுடைய தேசம் சிதறடிக்கப்பட்டிருந்தது; சபையானது குளிர்ந்து போன நிலையில் இருந்தது. இருப்பினும், இந்த எல்லா எதிர்ப்புகளும் இருந்த போதிலும், அந்த வயதான மனிதன், தான் கர்த்தருடைய கிறிஸ்துவைக் காணும் மட்டுமாக, மரணமடையப் போவதில்லை என்ற ஒரு சாட்சியை உடையவனாய் இருந்தான். அவனுடைய சக மனிதன் என்ன நினைத்திருப்பான் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? 17. அவர்கள், அந்த வயதான மனிதனுக்கு பைத்தியம் பிடித்து விட்டது, அல்லது அநேகமாக, அவன் வயோதிபனாக இருக்கும் காரணத்தினால், அவனுடைய மனநலம் பாதிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. எனவே, நாம் இவனை ஐக்கியத்தை விட்டு புறம்பாக்க மாட்டோம், ஆனால் நாம் இவனைக் கண்டும் காணாதது போல் இருந்துவிடுவோம், ஏனென்றால் இது மேசியா வரும் நேரமல்ல என்று நமக்குத் தெரியும்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 18. ஆனால் தேவன் தம்முடைய வாக்குத் தத்தங்களின் பேரில் காத்துக் கொண்டிருக்கும் மீதியாய் இருப்பவர்களை எப்போதுமே உடையவராய் இருக்கிறார். இன்றிரவும், தேவனுடைய வாக்குத்தத்தங்களின் பேரில் காத்திருந்து, அதே நம்பிக்கையின் பேரில் இளைப்பாறிக் கொண்டிருக்கும் அந்த மீதியானவர்கள் அவருக்கு இருக்கிறார்கள் என்பதற்காக தேவனுக்கு நன்றி செலுத்துகிறேன். ஏனென்றால் அது பரிசுத்தாவியின் மூலமாக வெளிப்படுத்தப் படுகிறது. 19. சிமியோன் ஆலயத்திற்கு தவறாமல் போகையில்; மற்ற வாலிப ஆசாரியர்கள், "நல்லது, இந்தக் கிழவன் சற்று ஏறக்குறைய முழுவதும் பைத்தியமாவதற்கு (crack up) தயாராக இருக்கிறான் என்று நினைக்கிறேன்” என்று சொல்லி இருப்பார்கள். ஆனாலும் அவன் எதைக் குறித்துப் பேசிக் கொண்டிருந்தான் என்பதை அவன் அறிந்திருந்தான், ஏனென்றால் யார் அதை அவனுக்கு வெளிப்படுத்தினது என்பதையும், தேவனால் தவறான எதையும் கூற முடியாது என்பதையும் அவன் அறிந்திருந்தான். அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிறார். 20. இந்நிலையில், அந்நாளில், அங்கே எந்த வானொலியோ, அல்லது தொலைக்காட்சியோ, தினசரி செய்தித்தாள்களோ இல்லாதிருந்தது. எனவே, அவர்கள் செய்தியைக் கொண்டு செல்ல வேண்டியிருந்த ஒரே வழி என்னவென்றால், அப்படியே உதட்டிலிருந்து காதுக்குப் பேசுவது தான்). ஆனால், யூதேயாவிலே, கிறிஸ்து பிறந்திருந்தார். எட்டு நாட்கள் கழித்து, விருத்தசேதனம் செய்யும் படியாக, அவர்கள் ஆண் பிள்ளைகளை ஆலயத்துக்குக் கொண்டு வருவதும், அதனோடு கூட, தாயின் பரிகரிப்பிற்காக, அவளுடைய சுத்திகரிப்பின் நிமித்தமாக, ஒரு காணிக்கையை கொண்டு வருவதும் வழக்கமாக இருந்தது. அந்தக் காணிக்கையானது ஒரு ஆட்டுக்குட்டி அல்லது இரண்டு புறாக்குஞ்சுகளாக (little turtle doves) இருந்தது. இப்பொழுது, ஆட்டுக்குட்டியானது பணக்காரர்களுக்கான காணிக்கையாகவும், புறாக்களோ ஏழைகளின் காணிக்கையாகவும் இருந்தது. 21. அது நிறைவேறுகிறது, நாம் இதைக் குறித்துக் கூறுவோம், ஒரு நாள் காலையில், திங்கள் கிழமை காலையில் ஓ, ஆலயத்தின் எல்லா பக்கங்களும் சுறுசுறுப்பாக இருந்தன. அங்கே பெண்கள் வரிசையாக நின்றிருப்பார்கள், தினமும் எல்லாருமே தங்களுடைய சிறு குழந்தைகளோடு வரிசையில் நிற்பார்கள். அந்நேரத்தில், இஸ்ரவேலர் ஏறக்குறைய 20 இலட்சம் (two million) பேராக வகைப்படுத்தப்பட்டு இருந்தார்கள், எனவே, ஒரே பகல் மற்றும் இரவில் எத்தனை பிள்ளைகள் பிறந்திருப்பார்கள் என்பதை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியும். எனவே, எட்டாவது நாள், சுத்திகரிப்பிற்காகவும், ஆண்பிள்ளைகளுக்கான விருத்த சேதனத்திற்காகவும் அவர்கள் இந்த வரிசையில் நிற்க வேண்டியிருந்தது. 22. இப்பொழுது, தொடர்ந்து போவோம், நாம் துரிதப்பட வேண்டியிருக்கிறது, அது ஞாயிறு காலையாக இருப்பதாக கற்பனை செய்து கொள்வோம். இன்றிரவு நம்முடைய கதாபாத்திரமான வயதான சிமியோன், சற்று நேரம் உட்காரும்படியாக ஏதோவொன்று அவனிடம் கூறினது. 23. ஓ, நாம் மிகவும் வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறோம் என்பது உங்களுக்குத் தெரியும், சில சமயங்களில் நாம் அப்படியே சற்று நேரம் உட்கார வேண்டும். நாம் ஓடிக்கொண்டே எனக்காக ஒரு சிறு ஜெபத்தைக் கூறுகிறோம், அம்மா, அப்பா, மற்றும் பிள்ளைகளாகிய நாம் மிகத் துரிதப்பட்டு, வேமாகக் கடந்து சென்று விடுகிறோம், தேவன் திரும்ப நம்மிடம் பேசும்படியாக, நாம் போதுமான நேரம் அங்கே தரித்திருப்பதில்லை. நாமே எல்லாவற்றையும் பேசிக் கொண்டிருக்கிறோம், தேவன் பேசுவதற்கு நாம் சந்தர்ப்பம் கொடுப்பதில்லை. 24. ஆனால், சிமியோன் அப்படியே காத்திருந்தான்; அவன் ஆசாரியர்களுக்கான உத்தியோக ஸ்தலம் ஒன்றில், கதவுகளை அடைத்து, தன்னைத் தானே பூட்டிக் கொண்டான். திடீரென்று, அவன் கீழே அந்தச் சிறு பிடிப்புச்சட்டத்திற்குள் (holder) நீட்டி, வேதப்புத்தகத்தை எடுப்பதை என்னால் காண முடிகிறது. 25. பரிசுத்த ஆவியானவர் வார்த்தையைக் கொண்டு போஷிப்பிக்கிறார் என்று உங்களுக்குத் தெரியும். "மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்" என்று இயேசு சொல்லி இருக்கிறார். அது தான் இன்றைக்குள்ள காரியமாகும், அந்தக் காரியங்களில் ஒன்று அது தான், அது தான் இன்று சபையை அதன் இரத்த சோகையான நிலையில் ஆக்குகிறது, அதற்குக் காரணம் என்ன என்றால், சபையானது வார்த்தையைக் கொண்டு போஷிக்க நேரம் எடுப்பதில்லை. (எனவே) சபையானது பசியாயிருக்கிறது. 26. நான் ஒரு மருத்துவராக இருந்து, மகத்தான பெரிய கட்டுடல் வாய்ந்தவனாகத் தோற்றம் அளிக்கும் ஒரு மனிதன் என்னிடம் வந்து, "ஐயா, நான் வியாதியாய் இருக்கிறேன்” என்று கூறினால். 27. நான், "உங்களுக்கு என்ன அறிகுறிகள் உள்ளன-?” என்று கேட்கிறேன். 28. அவனோ, “நான் மிகவும் பலவீனமாயிருக்கிறேன், என்னுடைய கைகளை மேலே தூக்குவதே கஷ்டமாக உள்ளது” என்று கூறுகிறார். 29. நல்லது, நான்... என்று கூறியிருப்பேன், ஒரு சில சரீர சம்பந்தமான நிலைமைகளைக் குறித்து அவனிடம் கேட்டிருப்பேன். 30. "ஆமாம், அதெல்லாம் சரியாகவே உள்ளது.” 31. அதற்கு நான், "நல்லது, ஐயா, நீர் ஒழுங்காக சாப்பிட்டு வருகிறீரா-?" என்று கேட்டிருப்பேன். 32. ஓ. அவன், "நேற்றைக்கு முந்தின நாள், நான் மெல்லிய கரகரவென்றிருக்கும் பிஸ்கட்டில் பாதி சாப்பிட்டேன்” என்று சொல்லி இருப்பான். 33. நல்லது, நான், "நீர் வெறுமனே பசியாயிருக்கிறீர். உமக்கு சக்தி தேவைப்படுகிறது, நீர் சாப்பிடுவது அவசியமாயிருக்கிறது” என்று கூறியிருப்பேன். 34. அது தான் சபையோடுள்ள காரியமாகும். வெறுமனே ஒரு வேத வசனத்தை வாசிப்பது, ஞாயிற்றுக் கிழமை காலையில் ஒரு சிறு வசனத்தை வாசிப்பது. நாம் பிழைக்க வேண்டுமானால், நாம் ஒவ்வொரு நிமிடமும் அவருடைய வார்த்தையில் முதலிடத்தைக் கொண்டிருக்க வேண்டும்-! நிறைய நேரம் எடுத்து, வார்த்தையை வாசிக்கும்படியாக மற்ற காரியங்களை நிறுத்தி ஒரு பக்கமாக ஒதுக்கிவைத்து விடுங்கள். மனுஷன் அப்பத்தினால் மாத்திரமல்ல, தேவனுடைய வாயிலிருந்து புறப்படுகிற ஒவ்வொரு வார்த்தையினாலும் பிழைப்பான்.” 35. அவன் புஸ்தகச் சுருளை எடுத்தான், அது ஒருக்கால் எழுதினதாக இருந்தது, அவன் ஏறக்குறைய (ஏசாயா-9:6) முதல் வாசிக்கத் தொடங்கினான். அவன் வாசிக்கத் தொடங்குவதாக என்னால் காண முடிகிறது. அது இவ்விதமாக எழுதப்பட்டிருந்தது: 'நமக்கு ஒரு பாலகன் பிறந்தார், நமக்கு ஒரு குமாரன் கொடுக்கப்பட்டார்; கர்த்தத்துவம் அவர் தோள்களின் மேலிருக்கும்; அவர் நாமம் ஆலோசனைக்கர்த்தா, சமாதானப்பிரபு, வல்லமையுள்ள தேவன், நித்திய பிதா என்னப்படும்” என்று. 36. அவன், "ஓ, அவர் யாரைக் குறித்துப் பேசிக் கொண்டிருக்க முடியும் என்று எனக்கு வியப்பாக உள்ளதே” என்று கூறிக் கொள்கையில், அந்த தீர்க்கதரிசியை, அவனை, அந்த ஆசாரியனை என்னால் காண முடிகிறது, சிமியோனிடம் அந்த வாக்குத்தத்தம் இருந்தது என்பதை நினைவு கூருங்கள். 37. ஏறக்குறைய அந்த நேரத்தில் தான், வெளியே கட்டிடத்தில், மேசியா அந்தக் கட்டிடத்தில் பிரவேசித்தார். தேவன் சிமியோனுக்கு ஒரு வாக்குத்தத்தம் செய்திருப்பாரேயானால், தேவன் சிமியோனுக்கு அந்த வாக்குத்தத்தைக் காத்துக் கொண்டும் விட்டார். 38. அவர்கள் வரிசையில் வரத் தொடங்கினார்கள். அவர்கள் வரிசையில் நின்று கொண்டு இருக்கையில், நான் அங்கே கவனிக்கிறேன், ஓ, பெண்கள், வசதி படைத்த பணக்கார பெண்கள் தங்கள் சிறு குழந்தைகளோடு நின்று கொண்டிருந்தார்கள், சிறு நீலநிற தையல் வேலைபாடுகள் கொண்ட (உடைகளையும், சிறு காலணிகளையும், சிறு மெல்லிய குல்லாய்களையும் அணிந்திருக்கிற சிறு ஆண் குழந்தைகளை வைத்திருந்தார்கள், மேலும் சிறு இளஞ்சிவப்பு நிற உடைகளை அணிந்திருந்த சிறு பெண்கள் (little girls). பலி செலுத்தும் படியாக சிறு வெள்ளை நிற கம்பளி போன்ற ஆட்டுக்குட்டிகளை வைத்திருந்தார்கள். பெண்களால் பேச முடிவது போன்று, அவர்கள், ஒருவரோடு ஒருவர் தொணதொணவெனப் பேசிக் கொண்டிருந்தார்கள் (chattering). 39. கீழே அந்த வரிசையில், வினோதமாகத் தோன்றுகிற ஒரு காட்சியை நான் காண்கிறேன். ஒரு சிறு பெண், அவளுக்கு ஏறக்குறைய 18 வயதுக்கு மேல் இருக்காது, அவள் தன்னுடைய கரங்களில் ஒரு சிறு குழந்தையை வைத்துக் கொண்டு நின்று கொண்டிருந்தாள். அந்தக் குழந்தைக்கு சிறு நீலநிற காலணிகளை அணிந்திருக்கவில்லை. அதைச் சுற்றிலும் பல மடிப்புகளுள்ள துணியால் (swaddling cloth) சுற்றப்பட்டிருந்தது. 40. இப்பொழுது, பல மடிப்புள்ள துணி என்றால் என்ன என்று எனக்குப் புரிகிறது என்றால், அது என்னவென்றால், அவர்கள் ஒரு காளையைக் கொண்டு ஏர் உழுகிற போது, அந்தக் காளையின் நுகத்தடியின் பின்பாகத்தில், அவர்கள் அதை வைத்து இருப்பார்கள். அவர் பிறந்த போது, அவருக்கு எந்த ஆடைகளும் இல்லாதிருந்தது. அப்படியானால், நாம் யாராக இருக்கிறோம்-? ஆனால், மகிமையின் இராஜா அதைப் போன்று அப்படிப்பட்ட ஒரு கோலத்தில் வந்தார். அருமையான மருத்துவமனை அறையில் அல்ல, ஆனால் தொழுவத்தில்; அவருக்கு உடுத்த எந்த ஆடைகளும் இல்லாதிருந்தது. அப்படியிருக்க நாம் முறையிடுகிறோம். 41. இதோ அவர் பல மடிப்புகளுள்ள துணியை (swaddling cloth) உடையவராய் இருந்தார். அது மட்டுமல்ல, ஆனால் அந்தப் பணக்கார பெண்கள், அந்தப் பெண் பக்கத்தில் நிற்காதே என்று சொல்லுகிறேன். அவளோடு எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம், அந்தக் குழந்தை திருமணம் ஆகாமலே பிறந்த குழந்தை ஆகும். அது முறைதவறிப் பிறந்த பிள்ளையாகும்” என்று சொல்லிக் கொண்டிருப்பதை என்னால் காண முடிகிறது. 42 மனிதனால் உண்டாக்கப்பட்ட அவர்களுடைய மார்க்கங்களில் சிலவற்றோடு பொறுத்துக் கொள்ளாத ஒரு உண்மையான கிறிஸ்தவனைக் குறித்தும் அவர்கள் இன்று ஏறக்குறைய அதே காரியத்தைத் தான் சொல்லுகிறார்கள். அவர்கள் பரிசுத்த விவாகத்துக்குப் புறம்பாக பிறந்தவர்கள் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்தக் குழந்தை யாருடையது என்று மரியாள் அறிந்திருந்தாள்; அந்த பிறப்பிற்கு காரணமாயிருந்தது என்னவென்று அவள் அறிந்திருந்தாள். 43. தேவனால் மறுபடியும் பிறந்த, ஒவ்வொரு குமாரனும் குமாரத்தியும், நீங்கள் மத வெறியன் என்றோ , பரிசுத்த உருளை என்றோ, அல்லது அதைப் போன்ற ஏதோவொன்றைப் போல் அழைக்கப்பட வேண்டியிருந்தாலும், ஆனால் நீங்கள் உண்மையாகவே தேவனுடைய ஆவியால் பிறந்திருந்தால், மற்ற உலகத்தார் என்ன நினைக்கிறார்கள் என்பது ஒரு பொருட்டாகவே இருக்காது. நீங்கள் பிரகாசமாகவோ, அல்லது ஏதோவொன்றாகவோ இல்லை என்று அவர்கள் கூறலாம். 44. ஆனால் அந்தக் குழந்தை என்னவென்றும், யாருக்கு சொந்தமானது என்பதையும் மரியாள் அறிந்திருந்தாள், எனவே அவர்கள் கூறுவதற்கு அவள் செவி கொடுத்து, அதன் பேரில் (கவனம் செலுத்தவில்லை. அவர்கள் என்ன வேண்டுமானாலும் கூறட்டும். அவருடைய சிறிய பல் இல்லாத வாயில் சிரித்துக் கொண்டிருக்க, அவள் அவரின் (குழந்தையின் கன்னத்தை தன்னுடைய விரலால் தட்டிக் கொண்டு இருந்தாள். அவர் மற்றவர்களைப் போன்று உடை உடுத்தாமல் இருக்கலாம். 45. ஆனால், ஓ தேவனே, நான் அவருடைய நிலையையே எடுக்க விரும்பியிருப்பேன். 46. அங்கே அவர் இருந்தார். நீங்கள் பாருங்கள், தேவனுடைய உண்மையான ஆவியானது ஒரு போதும் இந்த உலத்தால் மகிழ்ச்சியுடன் வரவேற்கப்பட்டதேயில்லை, அது ஒரு போதும் அவ்வாறு இருப்பதும் இல்லை. அது எப்போதுமே குறைவாக அறியப்பட்ட ஒன்றைப் போலவோ அல்லது ஏதோவொன்றைப் போலவோ, ஒரு விதத்தில் கீழ்நோக்கிப் பார்க்கப்படும் வகையால் தாழ்மையாகத்தான் (downcast) இருக்கிறது. 47. நல்லது, மேசியா அந்த ஆலயத்திலே இருந்து, சிமியோனுக்கு அந்த வாக்குத் தத்தம் இருந்திருக்கும் என்றால், அந்த வாக்குத்தத்தத்திடமாக சிமியோனைக் கொண்டு வருவது பரிசுத்த ஆவியானவரின் கடமையாய் இருக்கிறது. அவருடைய நாமத்திற்கு ஸ்தோத்திரம்-! அவன், அவன் வேத வாக்கியத்தை வாசித்துக் கொண்டிருக்கையில், திடீரென்று, பரிசுத்த ஆவியானவர், "சிமியோனே, ஒரு சில நிமிடங்கள் உன்னுடைய வேதாகமத்தை உள்ளே வைத்து விட்டு (lay away), என்னைப் பின்பற்றி வா: அங்கே ஒரு கூட்டம் போய்க் கொண்டிருக்கிறது; நீ அங்குப் போக விரும்புகிறேன்; அது உன்னுடைய ஸ்தாபனமாக இல்லாமல் இருக்கலாம், ஆனால் அங்கே ஏதேவொன்று போய்க் கொண்டிருக்கிறது; நான் ஒரு காரியத்தை உனக்குக் காண்பிக்கப் போகிறேன்” என்று கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. 48. நல்லது, தேவனுடைய மனிதர்கள் தேவனுடைய ஆவியினாலே வழிநடத்தப்படுகிறார்கள். தேவன் தமது ஜனங்களைத் தம்முடைய ஆவியினாலே வழிநடத்துகிறார். தேவன் ஒரு வரத்தைக் குறித்து வாக்குத்தத்தம் செய்யும் போது, தேவன் அப்படிப்பட்டவைகளைக் குறித்து, தமது ஜனங்களிடம் பேசுகிறார், ஏனென்றால் அந்த வரமானது சபைக்குரியதாக உள்ளது, கிறிஸ்து சபைக்குத் தான் (அதை) அனுப்பி இருக்கிறார். 49. சிமியோனுக்கு வாக்குத்தத்தம் இருந்தது. பரிசுத்த ஆவியானவர்... கவனியுங்கள், இதோ அவன் சரியாக எங்கே போய்க் கொண்டிருக்கிறான் என்பதை அறியாமலே வருகிறான், ஆனால் அவன் அப்படியே தன்னுடைய பாதையில் இருந்தான். அந்த விதமாகத்தான் உண்மையான கிறிஸ்தவர்கள் வழி நடத்தப்படுகிறார்கள். தேவன் ஒரு காரியத்தைக் கூறுவாரானால், தொடந்து போய், அதைச் செய்யுங்கள். 50. கீழே தெற்கு பாகத்தில், அங்கே ஒரு சமயம் கர்த்தரை உண்மையாகவே நேசித்த ஒரு - ஒரு வயதான கறுப்பின மனிதன் இருந்தான், அவன் முழு வார்த்தையையும் விசுவாசித்தான். ஒரு முறை அவனுடைய முதலாளி அவனிடம் சொன்னான், அவன், குறித்த ஏதோவொன்றை தேவன் சொல்லுவாரானால், என்ன நேரிடும்.." என்று கேட்டான், அல்லது, அவன் முதலில், "எதற்காக - நீ எதற்காக அந்த வேதாகமத்தை எடுத்துக் கொண்டு போகிறாய்-?” என்று கேட்டான். 51. அதற்கு அவன், "எஜமானரே, நான் அதை (வேதாகமத்தை) விசுவாசிக்கிறேன்” என்று கூறினான். 52. "உன்னால் தான் வாசிக்க முடியாதே, நல்லது, (அப்படியானால்), எதற்காக நீ அதை எடுத்துச் செல்கிறாய்-?” என்று கேட்டான். 53. அவன், "நான் அதை civer முதல் civer வரைக்கும் விசுவாசிக்கிற காரணத்தால், அதை கொண்டுபோகிறேன். நான் civer-ஐம் கூட விசுவாசிக்கிறேன், ஏனென்றால் அதன் மேல் 'பரிசுத்த வேதாகமம்' என்று உள்ளது என்று யாரோ என்னிடம் கூறுகிறார்கள். அது தேவனுடைய வாக்குத்தத்தமாக இருக்கிற காரணத்தினால், அது தவறிப்போக முடியாது என்று எனக்குத் தெரியும்” என்று கூறினான். 54. "அவர் அந்த வாக்குத்தத்தங்கள் எல்லாவற்றையும் காத்துக் கொள்வார் என்று நீ விசுவாசிக்கிறாயா-?” என்று கேட்டான். 55. அவன், "அவர் அவைகளைக் காத்துக் கொள்வார் என்று மிக அதிக நிச்சயம் உடையவனாயிருக்கிறேன்" என்றான். 56. அவன், "அந்தக் கல் சுவர் வழியாகக் குதிக்கும்படி தேவன் உன்னிடம் சொன்னால் என்னவாகும்-? நீ அவ்வாறு குதிப்பாயா-?" என்று கேட்டான். 57. அவன், "நான் குதிப்பேன்” என்றான். 58. அவன், “அங்கு அதில் எந்த துவாரமும் இல்லாமல் இருந்தால், உன்னால் எப்படி அதனூடாக போக முடியும்-?" என்று கேட்டான். 59. அவன், "குதிக்கும்படி தேவன் என்னிடம் கூறியிருந்தால், நான் அங்கு போகும் போது, அவர் அங்கே ஒரு துவாரத்தைக் கொண்டிருப்பார்” என்றான். அது சரியே. தேவன் தம்முடைய வாக்குத்தத்தைக் காத்துக் கொள்கிறார்-! 60. சிமியோன் வெளியே வந்து, கட்டிடத்தினூடாக சுற்றும் முற்றும் பார்த்துக் கொண்டு இருந்தான். சரியாக எங்கே போவது என்று அவனுக்குத் தெரியவில்லை, ஆனால் அவன் போய்க் கொண்டே இருந்தான். தேவன் வாக்குத்தத்தம் பண்ணியிருந்தார். வாக்குத் தத்தத்தைக் காத்துக் கொள்வது என்பது தேவனைப் பொறுத்தது. தேவன் உங்களுக்கு சுகத்தைக் கொடுப்பதாக வாக்குப் பண்ணியிருப்பாரானால், நீங்கள் எவ்வாறு உணருகிறீர்கள் என்பது எந்த வித்தியாசத்தையும் உண்டாக்காது, அப்படியே தொடர்ந்து போய்க்கொண்டே இருங்கள். சரியான நேரத்தில், அவர் அதைக் கொண்டிருப்பார். எபிரெய பிள்ளைகளுக்கும் அவர் செய்தார். அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தை எல்லாருக்குமே காத்துக்கொள்கிறார். 61. இதோ அவன் கட்டிடத்தினூடாக நடந்து வருகிறான், அவன் எங்கே போய்க் கொண்டு இருக்கிறான் என்பதை அறியாதிருந்தான். திடீரென்று, பெண்கள் நீண்ட வரிசையில் நின்று கொண்டிருப்பதைக் கண்டான், மேலும் அந்தச் சிறு, கூச்ச சுபாவம் கொண்ட, முகம் சிவந்த சிறு பெண் நடுத்தர வயதுடைய கணவனோடு கூட அங்கே நின்று கொண்டிருப்பதைக் கண்டான், அவனுக்கு வேறு நான்கு பிள்ளைகள் இருந்தார்கள், சிறு, சுற்றப்பட்டிருந்த பல மடிப்புகளுள்ள துணியை (swaddling cloth) தம்மைச் சுற்றிலும் உடையவராய் இருந்த இந்தக் குழந்தையைப் பிடித்தபடியிருந்த அவளை அவன் நோக்கிப் பார்த்தான்; பரிசுத்த ஆவியானவர், "சீமோனே, அங்கு போ” என்றார். 62. அவன், கர்த்தரிடம் கேள்விக் கேட்கவில்லை. அவன் அப்படியே நடக்கத் தொடங்கினான். ஏன்-? யாரோ ஒருவர் கேள்விக்கேட்டிருப்பார்கள், ஆனால் ஞாபகம் கொள்ளுங்கள்: நேரத்திற்கு முன்பாகவே, அவன் பரிசுத்த ஆவியானவரிடம் பேசிக்கொண்டு வந்திருந்தான்; பரிசுத்த ஆவி ஒரு மனிதன் மேல் வரும் போது, அதற்கு மேல் அவன் கேள்வி கேட்கவே மாட்டான், அவன் அப்படியே சென்று, செய்யும்படி பரிசுத்த ஆவியானவர் கூறுவதைச் செய்கிறான். ஏனென்றால் அவன் வேத வாக்கியங்களை அறிந்திருக்கிறான், அது நிறைவேறும்படியான அதற்கான நேரமாக இருந்தது; எனவே அவன் வேதப் பூர்வமாகவே இருந்தான், அவன் ஒவ்வொரு விதத்திலும் சரியாகவே இருந்தான். 63. அவன் இந்தப் பரிதாபகரமான காட்சியைக் காணும் மட்டுமாக, அவன் அந்த வரிசையினூடாகப் போகிறான். உங்களால் அதை கற்பனை செய்து பார்க்க முடிகிறதா-? சிருஷ்டிகர் உண்டாக்கின அதே கட்டிடத்திலேயே அந்த சிருஷ்டிகர் இருந்தார், மேன்மை உள்ளவராக காணப்படும்படி கூட போதுமான ஆடைகள் அவருக்கு இல்லாதிருந்தது; அவருக்காக காளையின் கழுத்திலிருந்த பல மடிப்புகளுள்ள துணியை (swaddling cloth) எடுக்க வேண்டியிருந்தது. 64. சிமியோன் அங்கு வருகிறான். இந்தக் குழந்தையின் முகத்தை அவன் கண்ட உடனேயே, அவன் அந்தச் சிறு தாயின் கரங்களை அடைந்து, அவனுடைய வெள்ளைத் தாடியில் கண்ணீர் வடிய அச்சிறு குழந்தையை வாங்கி, அவரை மேலே ஏந்திக் கொண்டு, "ஆண்டவரே, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர், இப்பொழுது எல்லாம் சரியாக இருக்கிறது: உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" என்றான். 65. அது என்னவாக இருந்தது, மற்ற எல்லாருமே பார்த்து நகைத்தாலும் என்ன, மற்ற எல்லாரும் கேலி செய்தாலும் என்ன, சிமியோன் பரிசுத்த ஆவியினாலே, தேவனுடைய வாக்குத்தத்தத்தை அடையாளம் கண்டு கொண்டான். நீங்கள் அதைக் காண குருடாக இருக்க வேண்டியதில்லை, அல்லது நான் பேசிக் கொண்டிருப்பதைக் குறித்து அறிந்திருக்கவும் வேண்டியதில்லை. உலகம் முட்டாள்தனம் என்று அழைப்பது தான், சபையை மகிமைக்குக் கொண்டு போவதற்கு தேவனுடைய இரட்சிப்பின் திட்டமாக இருக்கிறது. 66. "உமது அடியேனை சமாதானத்தோடே போகவிடுகிறீர்: உம்முடைய இரட்சணியத்தை என் கண்கள் கண்டது" என்றான். மேலும் அவன் மரியாளிடம் கூறினான், அவன், "உன் இருதயத்தை துளைத்து ஊடுருவும்படி, இந்தப் பிள்ளை அனுப்பப்பட்டு இருக்கிறது, அநேகருடைய சிந்தனைகள் அறியப்பட்டு, வெளிப்படுத்தப்படும் பொருட்டாக இப்பிள்ளை அனுப்பப்பட்டிருக்கிறான்” என்றான். 67. மேலும் கவனியுங்கள், என்னுடைய யூத நண்பர்களே, உங்களிடம் தான், நான் இன்றைக்கு சற்று முன்பு, சந்தித்த ஒரு யூதர் எனக்கு இருக்கிறார், அவர் இங்கே முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கிறார், அல்லது சரியாக சகோதரன் கிட் அவர்களுக்குப் பின்னால் இருக்கிறார், அவர் ஒரு ரஷ்ய யூதர், என்னுடைய இருதயம் இஸ்ரவேலை நோக்கிப் போகிறது, அதற்கு இப்பொழுது அதிக காலமில்லை. அவர்களுடைய நாள் மலர்ந்து கொண்டிருக்கிறது (blooming). சூரியன் உதித்துக் கொண்டிருக்கிறது. பழங்கால ஆறு முனை கொண்ட தாவீதின் நட்சத்திரம் இன்றிரவு எருசலேமில் தொங்கிக் கொண்டிருக்கிறது, அது தான் உலகத்திலேயே மிகப் பழமையான கொடியாகும்; 2500 வருடங்களில் அவர்கள் ஒரு தேசமாக இருப்பது இதுவே முதல் முறையாகும். அத்திமரம் துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது. புறஜாதிகள் முடிந்து விட்டார்கள். உ-ஊ சற்று ஏறக்குறைய முடிந்துவிட்டது. 68. ஓ, நான் அதன் பேரில் நள்ளிரவு மட்டுமாக தரித்திருக்க எவ்வளவாக விரும்புகிறேன். அவர்கள் ஒரு தேசமாக ஆகிற நாள், அவர்கள் ஒரு தேசமாக ஆகும் அதே மணி வேளையில், அது எனக்குத் தெரியாமலே, கர்த்தருடைய தூதனானவர் எனக்கு இந்த ஊழியத்தை சரி என நிரூபிக்கும்படியாக அவர் அங்கே பின்புறத்தில் இருந்தார், அந்த அதே மணி வேளையில், அதைக் குறித்து அறியாமலேயே. 69. நான் சமீபத்தில் கெய்ரோவில் இருந்தேன், உள்ளே போய்க் கொண்டிருந்தேன். யூதர்கள் அடையாளங்களைத் தேடுகிறார்கள். அவர்கள், "இது மேசியாவாக இருந்தால், அவர் தமது உயிர்த்தெழுதலின் அடையாளத்தைச் செய்வதை நான் காணட்டும். அப்போது நாங்கள் அதை விசுவாசிப்போம்” என்று கூறினார்கள். 70. ஆனால் பரிசுத்த ஆவியானவரோ, "இப்பொழுது வேண்டாம்” என்று கூறிவிட்டார். எனவே, நான் திரும்பி, மேலே மார்ஸ் ஹில்லுக்கு (Mars' Hill) போய் விட்டேன், அதன் பிறகு அப்படியே வத்திக்கனுக்கு. ஓ , நாம் முடிவில் இருக்கிறோம். 71. என்ன சம்பவித்தது என்பதைக் கவனியுங்கள். அவன், "இதுவே அடையாளம். இஸ்ரவேல் விழுவதற்கும் மீண்டும் எழும்பவும் இந்தப் பிள்ளை அனுப்பப்பட்டிருக்கிறார்; விழுவதற்கும் மறுபடி எழுவதற்கும். இந்த அடையாளம் தீமையாகப் பேசப்படும். இந்த அடையாளத்திற்கு விரோதமாக தீமையாக பேசப்படும்” என்றான். 72. கவனியுங்கள். ஓ, மற்றவர்களோ தொணதொணவென பயனின்றிப் பேசிக் கொண்டு (chattering), "ஹலோ, டாக்டர் இரட்டை - எல்.டி. ஜோன்ஸ் அவர்களே, நீர் வந்து, விருந்திற்காக எங்களோடு கூட கோழிக் கறியைக் கொண்டிருப்பீரா-? ஓ, ரபி லெவின்ஸ்கி அவர்களே, நீர் எப்படி இருக்கிறீர்” என்று கூறிக் கொண்டிருந்தார்கள். 73. ஆனால், பின்னால் அந்த மூலையில், ஆலயத்தின் மற்ற பக்கத்தில், ஒரு வயது சென்ற, குருடான தீர்க்கதரிசி உட்கார்ந்திருந்தாள், அவளுக்கு 84 வயதாக இருந்தது. அவள் ஒரு தீர்க்கதரிசினி. அவள் ஆலயத்திலேயே தங்கியிருந்து, ஜெபம் செய்து கொண்டிருந்தாள். அந்த அதே நொடி நேரத்தில், பரிசுத்த ஆவியானவர் அவள் மேல் வந்தார்; இதோ குருடாயிருந்த அவள், நல்ல பார்வையைக் கொண்டிருந்த ஜனங்களினூடாக தன்னுடைய வழியை உண்டாக்கினவளாய், வருகிறாள், ஆனால் அவள் ஆவியினால் வழிநடத்தப்பட்டாள். அந்த குருடா...ஐச் சுற்றிலும் போய்க் கொண்டிருந்த, பகட்டணி உடையை உடுத்தி, நல்ல கண் பார்வையைக் கொண்டு, அங்கே அதனூடாகப் போய்க் கொண்டிருந்த எல்லாரும் அவர்களால் காண முடிந்ததைக் காட்டிலும், இவளால் அதிகமாகக் காண முடிந்தது, அவள் ஆவியானவரால் வழி நடத்தப்பட்டாள். அவள் பிள்ளையிடம் வரும் வரையில், அவள் அந்தக் கட்டிடத்தினூடாக அதே திசையில் ஒழுங்காகப் போய்க் கொண்டிருந்து, அதோ அவருக்காக தேவனுக்கு துதி செலுத்தினாள். 74. நண்பர்களே, அந்த அதே பரிசுத்த ஆவியானவர் இன்றிரவு இங்கே இருக்கிறார். அங்கே இரண்டு பரிசுத்த ஆவிகள் கிடையாது, அங்கே ஒரே ஒரு பரிசுத்த ஆவிதான் உண்டு. நீங்கள் வேதாகமத்தில் இயேசு கிறிஸ்து நேற்றும் இன்றும் என்றும் மாறாதவராயிருக்கிறார் என்று வரும் இடத்தை வாசித்திருக்கிறீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இருக்கிறது. நீங்கள் தெய்வீக சுகமளித்தலுக்காக அவரை விசுவாசித்து இருக்கிறீர்கள். 75. இந்த வருடங்கள் எல்லாம் நீங்கள் நம்பியிருக்கிற அந்த அதே பரிசுத்த ஆவியானவர் தான் தேசத்தின் ஒரு பாகம் முதல் மறுபாகம் வரைக்குமுள்ள உங்களை, கடைசியாக தாம் வாக்குத்தத்தம் பண்ணியிருக்கிற எல்லாவற்றையும் நிறைவேற்றும்படியாக, வாக்குத் தத்தங்களைச் செய்துள்ள, இன்றிரவு இங்கேயிருக்கிற அதே பரிசுத்த ஆவியானவரின் பிரசன்னத்திற்குள் நாம் இன்றிரவு வருவது மட்டுமாக, அந்த பனிப்பொழிவுகள் வழியாகவும், கீழே அந்த மூடுபனியினூடாகவும், வீதிகளினூடாகவும் வழி நடத்தியிருக்கிறார், ஏனென்றால் எது எப்படி இருந்தாலும், தேவன் தம்முடைய வாக்குத் தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். அவர் ஒரு கிரியையைச் செய்வார். அவர் ஒரு அடையாளத்தைக் காண்பிப்பார். அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராயிருக்கிறார். நீங்கள் அதை விசுவாசிக்கிறீர்களா-? 76. ஓ, எனக்கு இன்னும் கொஞ்சம் கூடுதல் நேரம் இருந்திருக்க விரும்புகிறேன், ஆனால் நமக்கு நேரமில்லை. நாம் சற்று நேரம் ஜெபத்திற்காக நம்முடைய தலைகளைத் தாழ்த்துவோம். இந்தப் பள்ளி அரங்கத்திற்கு தெய்வீக வழிநடத்துதலினால் வழிநடத்தப்பட்டிருக்கிற விசுவாசிகள் எத்தனை பேர் இங்கே இன்றிரவு உள்ளே இருக்கிறீர்கள், அதே பரிசுத்த ஆவியானவர் இங்கே உங்களை வழிநடத்தி இருக்கிற எத்தனை விசுவாசிகள் இருக்கிறீர்கள்-? அது நல்லது. இன்றிரவு, உங்கள் ஆத்துமாவில் மிகவும் நலமாக உணராதிருக்கிற சிலர் இங்கே இருக்கிறீர்களா என்று வியப்படைகிறேன்-? அது போன்று, இயேசு இன்றிரவு தரிசனமாக வேண்டுமானால், நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நிற்க தகுதியற்றவர்கள் என்று சற்றே உணருகிறவர்கள், அவர் இப்பொழுது உங்களை நினைவு கூர்ந்து, உங்கள் பாவங்களை உங்களுக்கு மன்னிக்கும்படி விரும்புகிற சிலர் இங்கே இருக்கிறார்களா என்று வியப்பு அடைகிறேன். அப்படியானால் நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? ஓ, என்னே, அங்கே அவர்களை எண்ணுவதற்கு எந்த வழியும் இல்லாதிருக்கிறது. 77. பாவியான நண்பனே, நீ ஒரு பாவியாக இருந்தபோதிலும், நீ ஒருக்காலும் எந்த அறிக்கையும் செய்யாமல் இருக்கிறாயா என்று நான் இன்றிரவு வியப்படைகிறேன், ஆனால் நீங்கள் உண்மையாகவே விசுவாசியுங்கள், அவர் ஒரு காரியத்தைச் செய்வதை நீ காண்பதற்கு முன்பு, பரிசுத்த ஆவியானவர் தான் இன்றிரவு இங்கே உங்களை வழி நடத்தியிருக்கிறார் என்று விசுவாசியுங்கள். நீங்கள் இரக்கத்திற்காக உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக, தேவன் உன்னை, உன்னை, உன்னை, உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. சீமாட்டியே, உன்னை. உன்னை. அது நல்லது. 78. மேலே பால்கனியில் வலது பக்கத்தில்-? ஓ, அங்கே சுற்றிலும் இருக்கிற உங்களை ஆசீர்வதிப்பாராக. அது சரி. எட்டு, பத்து . 79. மேலே இரண்டாவது பால்கனியில். உங்கள் கரத்தை உயர்த்தி... என்று கூறுங்கள். ஆமாம், சீமாட்டியே, தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. இங்கே பின்னால், தேவன் உன்னை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. 80. பால்கனிகளில் பின்புறத்தில், நீங்கள் உங்கள் கரங்களை உயர்த்துவீர்களா-? தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக, ஐயா. தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. சிவப்பு நிற கம்பளிச் சட்டையை கொண்டிருக்கிற அங்கே மேலே, உச்சியில் இருக்கிற உங்களை (தேவன்) ஆசீர்வதிப்பாராக, ஆமாம், (தேவன்) உங்களை ஆசீர்வதிப்பாராக. பால்கனிகளில் 81. எனது இடது பாகத்திலுள்ள இரண்டாவது பால்கனியில், அங்கே மேலேயிருக்கும் உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. தேவன் உங்கள் கரத்தைக் காண்கிறார். 82. இடது பக்கத்தில் கீழே உள்ள பால்கனியில், உங்கள் கரத்தை உயர்த்துங்கள். 83. "தேவன் என்மேல் இரக்கமாயிருப்பாராக," என்று கூறுங்கள், நீங்கள் உங்கள் கரத்தை உயர்த்தி இருக்கையில், "நான் விசுவாசிக்கிறேன். பரிசுத்த ஆவியானவர் தான் என்னை வழி நடத்தியிருக்கிறார் என்று விசுவாசிக்கிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. அதைச் செய்வதற்கு நிறைய தைரியம் தேவைப்பட்டிருக்கலாம், ஐயா, ஆனால் நீங்கள் எப்பொழுதும் செய்ததிலேயே இதுவே மிகப்பெரிய காரியமாகும். 84. எனது இடது பக்கத்திலுள்ள தளத்தில், நீங்கள் கிறிஸ்துவை நோக்கி உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? அப்படியே, தேவனாகிய கர்த்தாவே, என் மேல் மனமிரங்கும்; நான் இன்றிரவு பரிசுத்த ஆவியால் தெய்வீகமாக இங்கே வழி நடத்தப்பட்டிருக்கிறேன்” என்று கூறுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பாராக. வலது பக்க தளத்தில்-? தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. அது நல்லது. 85. இப்பொழுது, நாம் ஒரு பீட அழைப்பை விடுப்பதற்கு முன்பு, நாம் ஜெப வரிசையை அழைப்போம். ஆனால் முதலில், தேவன் இந்த ஜனங்களை ஆசீர்வதிக்க வேண்டும் என்று ஜெபம் செய்வோம். 86. அவர் சிமியோனை வழி நடத்தினது போன்று, ஆவியானவர் உங்களையும் வழிநடத்திக் கொண்டிருக்கிறார் என்று நீங்கள் உணர முடியும்படி, எத்தனை பேர் அவரோடு கூட சற்று நெருக்கமான ஐக்கியத்தைக் கொண்டிருக்க விரும்புகிறீர்கள், முடிவில் அவர் உங்களையும் தம்முடைய மார்புக்கு கொண்டு வருவார் என்று எத்தனை பேர் விரும்புகிறீர்கள்-? உங்கள் கரத்தை உயர்த்துவீர்களா-? ஓ, அப்படியே.... அங்கே 2000 அல்லது அதற்கும் அதிகமாக, 3000 பேர் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். நாம் ஜெபம் செய்வோம். இப்பொழுது, உங்களுடைய சொந்த வழியில் அவரிடம் கேளுங்கள். 87. தேவனாகிய கர்த்தாவே, நீரே எங்கள் தேவனாக இருக்கிறீர். நீர் மாத்திரமே உண்மையான, ஜீவனுள்ள தேவனாயிருக்கிறீர் என்பதற்காக நாங்கள் மிகவும் மகிழ்ச்சி உள்ளவர்களாய் இருக்கிறோம். 88. இன்று உலகத்தில் அநேக தேவர்கள் இருக்கிறார்கள். அவர்களில் சில இன்பத்தின் தேவன், சில மாம்சத்தின் தேவன். அநேகமாக உலகப்பிரகாரமான எந்த இன்பத்தையும் அவர்கள் ஒரு தேவனாக ஆக்கிக் கொள்கிறார்கள். அங்கே பொய்யான தேவர்கள் இருக்கிறார்கள், ஆனால் அவைகள் பேசாது, அல்லது அவைகளால் பேச முடியாது. அவைகளால் சிந்திக்க முடியாது. அவைகளால் உத்தரவு அருள முடியாது. உண்மையான ஜீவனுள்ள தேவனைக் குறித்த அறியாமையில் நடப்பவர்கள் மூலமாகத் தான் அவைகள் தொழுது கொள்ளப்பட முடியும். 89. நாங்கள் மரணத்தை விட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டு விட்டோம் என்றும், எங்கள் தேவன் ஜீவிக்கிறார் என்பதை அறிந்து கொள்ளவும், நாங்கள் இன்றிரவு சிலாக்கியமுள்ளவர்களாக இருக்கிறோம். அவர் செவிடாகவோ, ஊமையாகவோ இல்லை. அவர் கீழே வந்து, நாங்கள் வாஞ்சிக்கிற எந்தச் சிறு ஆசீர்வாதங்களையும் எங்களுக்கு அருளும்படி, அவருடைய கை குறுகிப்போகவும் (too short) இல்லை; அவர் தம்முடைய வாக்குத்தத்தத்தைக் காத்துக் கொள்கிறார். அவர் பேசக் கூடிய தேவன், அவர் உத்தரவு அருளக்கூடிய தேவன், அவர் தம்முடைய வார்த்தையைக் காத்துக் கொள்கிற தேவனாக இருக்கிறார். 90. இப்பொழுது, அன்புள்ள தேவனே, பாவிகளாக தங்கள் கரங்களை உயர்த்தி இருக்கிறவர்களை ஆசீர்வதிக்க வேண்டுமென்று, இன்றிரவு நாங்கள் வேண்டிக்கொள்கிறோம். சிலர்... இருக்கலாம். ஓ, பிதாவே, எனக்குத் தெரியாது, எத்தனை பேர் என்று எவ்வாறு சொல்லுவது என்று எனக்குத் தெரியவில்லை, ஆனால் உமக்கு அவர்கள் ஒவ்வொருவரையும் தெரியும். 91. ஒருக்கால் அவர்கள் எப்பொழுதாவது இந்தக் கூட்டங்களில் ஒன்றில் இருந்திருப்பது இதுவே முதல் முறையாக இருக்கலாம், ஆனால் பரிசுத்த ஆவியானவர் தான் அவர்களை வழி நடத்தி இருக்கிறார் என்று அவர்கள் சரியாக இப்பொழுதே வார்த்தையின் மூலமாக திடமாக நம்புகிறார்கள். இவர்களை இரட்சியும், கர்த்தாவே. 92. பரிசுத்த ஆவியானவர் இவர்களை இழுக்கும் போது, இவர்கள் பரிசுத்த ஆவியானவரின் வழி நடத்துதலை தவற விட்டுவிடாமல் இருக்கும் அளவுக்கு உமது அன்பினால் மிகவுமாக நிறையப்பட விரும்புகிறவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நாட்கள் இருண்டதாக இருக்கிறது, அவர்கள் தேவனுடைய வார்த்தையைக் கேட்கும்படியாக, இங்கும் அங்கும் ஓடியும், அவர்கள் அதைக் கேட்க மாட்டாமல் போவார்கள் (fail to hear) என்று, தீர்க்கதரிசி கூறியபடியே, மனிதர்கள் இங்கும் அங்குமாக ஓடிக் கொண்டு இருக்கிறார்கள். இருப்பினும், தேவனுடைய பண்டகசாலையில் ஒரு சிறு கீறல் இருப்பதற்காக நாங்கள் மிகவும் நன்றி உள்ளவர்களாக இருக்கிறோம். 93. நீர் உமது சபையின் முன்னிலையில், உமது உயிர்த்தெழுந்த வல்லமையிலே, உம்மைத் தாமே பகிரங்கமான வெளிப்படுத்த வேண்டுமென்று நாங்கள் இப்பொழுது ஜெபிக்கிறோம். என்னுடைய இருதயத்தையும், என்னுடைய ஆத்துமாவையும், என்னுடைய ஆவியையும் பரிசுத்தப்படுத்தும். கேட்டுக் கொண்டிருக்கிற இந்தக் கூட்டத்தினரின் இருதயத்தையும், ஆத்துமாவையும், ஆவியையும் பரிசுத்தப்படுத்தும், ஸ்தோத்தரிக்கப்பட்ட கர்த்தராகிய இயேசுவின் ஐக்கியத்தை நாங்கள் ஒருமித்து மகிழ்ச்சியோடு அனுபவித்துக் கொண்டு இருக்கிறோம். அதன் பிறகு, நாங்கள், பலமான விசுவாச கரங்களைக் கொண்டு, அவரைத் தழுவி, அவருடைய வருகைக்கு ஆயத்தப்படுவோமாக. ஆலயத்தில் இருந்த சிமியோன், ஆண்டவரே, உமது அடியேனை இப்பொழுது சமாதானத்தோடே போகவிடுகிறீர்: அவருடைய உயிர்த்தெழுதலின் அடையாளத்தை நாங்கள் கண்டிருக்கிறோம், அவர் வருவதைக் காண நாங்கள் ஏங்கி, (ஆசைப்படுகிறோம்” என்று சொன்னது போன்று. இதை அருளும், கர்த்தாவே, உமது நேச குமாரனாகிய இயேசுவின் நாமத்தில், நாங்கள் இதைக் கேட்கிறோம். ஆமென். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 94. இப்பொழுது, நான் இதைப் பதிவு செய்து கொண்டிருக்கிறேன் என்பது நினைவிருக்கட்டும். உங்கள் சரீரத்தை சுகப்படுத்தும் எந்த மருந்துமே கிடையாது. தேவன் சுகப்படுத்துகையில், ஒரு மருந்தானது அந்த இடத்தை சுத்தமாக வைத்துக் கொள்கிறது. மருத்துவர் ஒரு - ஒரு அடைப்பை அகற்றலாம், ஆனால் அவர் உங்களை விட்டு வெட்டி எடுக்கிற அந்த துவாரத்தைக் குறித்து என்ன-? சுகமளித்தல் என்பது செல்கள் விருத்தியாவதாக இருக்கிறது. என்னுடைய வார்த்தையை எடுத்துக் கொள்ளுங்கள். பிசாசினிடத்தில் எந்த சுகமளிக்கும் வல்லமையும் கிடையாது. அவ்விதம் கூறுகிற ஒரு பிரசங்கியாருக்கு வேதாகமத்தையோ, அல்லது அவருடைய தேவனையோ தெரியாது என்பதைத் தான் அது காட்டுகிறது. "சாத்தான் சாத்தானைத் துரத்த முடியாது" என்று இயேசு கூறியிருக்கிறார். உங்கள் சகல வியாதிகளையும் சுகமாக்குகிற கர்த்தர் நானே” என்று சங்கீதம் 103:3 கூறுகிறது. அது சரி தானா-? 95. சாத்தானால் சுகமளிக்க முடியாது. சாத்தானால் சுகமளிக்க முடியுமானால், அவனால் சிருஷ்டிக்கவும் முடியும், அவன் ஒரு சிருஷ்டிகனாக இருக்கிறான் என்றால், அப்படியானால் அவன் ஒரு தேவன். அவன் ஒரு சிருஷ்டிகனாக இருந்தால், அவன் தனக்குத் தானே ஒரு இராஜ்யத்தை உண்டாக்கி, தனக்கு கொஞ்சம் ஜனங்களை உண்டாக்கியிருக்க முடியும். வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதல்ல, ஆனால் ஒரு அற்புதமான போதகராகிய டாக்டர்.டீஹான் அவர்களோடு நான் நிச்சயமாக வேறுபாடு கொள்கிறேன், சர்ப்பத்தின் வித்தின் பேரிலும் கூட அதைச் சிந்தித்துப் பார்த்தால்... அல்லது தேவ குமாரர்கள் மாம்சத்திற்குள் தங்களைத் தாங்களே தள்ளிக் கொண்டார்கள் என்று கூறிய ஜோசபஸ். ஒருக்கால் நாம் இங்கிருந்து போவதற்கு முன்பு, நம்மால் அதற்கு வர முடியும். அப்படிப்பட்ட எந்தக் காரியமும் கிடையாது. அப்படியானால், சாத்தானால் அதைச் செய்யக் கூடுமானால், அவன் ஒரு சிருஷ்டிகனாக இருக்கிறானே. அவன் ஒரு சிருஷ்டிகனாக இருந்தால், அவன் ஒரு தேவனாக இருக்கிறான்; அவனால் தனக்கு ஒரு உலகத்தை உண்டாக்கவும், தனக்கு ஒரு பிரபஞ்சத்தையும், தனக்கு ஒரு ஜனங்களையும் உண்டாக்கிக் கொள்ள முடியும். ஆனால், தேவன் சிருஷ்டித்தவைகளை அவன் தாறுமாறாக்குகிறான் (pervert). நீதி என்பது... அநீதி என்பது நீதி தாறுமாறாக்கப்படுதலாகும். 96. பில்லி, நான் அழைத்த எல்லாரையும் வரிசையில் கொண்டு வந்து விட்டாயா-? லியோ, இப்பொழுது அங்கே பின்னால் அவர்களைக் கவனி. 97. எத்தனை பேர் ஜெப அட்டை இல்லாதிருந்தும் தேவன் உங்களைச் சுகப்படுத்த விரும்புகிறீர்கள், உங்கள் கரங்களை உயர்த்துங்கள்-? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 98. நல்ல நண்பராகிய, சகோதரன் மற்றும் சகோதரி கிட் அவர்கள் சரியாக இங்கே முன்பக்க இருக்கையில் அமர்ந்திருக்கிறார்கள். அதோ கூட, நான் இந்தக் காலையில் அவரோடு இருந்த, இந்தச் சிறு யூத சகோதரனாகிய ஜோசப் அவர்கள் இங்கே இருக்கிறார். சகோதரன் நெவில், சகோதரன் மற்றும் சகோதரி உட் அவர்கள், சரியாக இங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டு இருக்கிறார்கள், ஏறக்குறைய மையப்பகுதியில் இருக்கிறார்கள். 99. சகோதரன் உட் அவர்கள் ஒரு யேகோவா சாட்சிக்காரராக இருந்தார். அவருக்கு ஊனமுற்ற ஒரு மகன் இருந்தான், அவனுடைய கால்கள் போலியோவினால் அசைவின்றி இருந்தது. கூட்டத்தில் பரிசுத்த ஆவியானவர் திரும்பப் பேசி, இந்தக் கட்டிடம் இருக்கும் நீளத்தைக் காட்டிலும், தூரத்தில் அவன் இருந்தான். அங்கே பின்னால் உட்கார்ந்து கொண்டிருக்கும் மனிதன்..'' அவர்கள் யாரென்றும், அதைக் குறித்த எல்லாவற்றையும் அவனிடம் கூறினார். அந்தப் பையன் சுகமடைந்தான். இப்பொழுது, எந்தக் கால் முடமாகி இருந்தது என்பதும் கூட அவனுக்குத் தெரியவில்லை . அது சரி தானா, சகோதரன் மற்றும் சகோதரி உட்-? அது சரி என்றால், உங்கள் கரங்களை மேலே உயர்த்துங்கள். அதோ இருக்கிறீர்கள். 100. கர்த்தருக்காக மகத்தான சாட்சிகளில் சிலவற்றை நாங்கள் பெற்றிருந்தோம். அதைச் செய்வதற்கு நமக்கு நேரமில்லை . 101. சரி, இப்பொழுது, அப்படியே மிகவும் பயபக்தியாயிருங்கள். இப்பொழுது, ஜெபம் பண்ணுங்கள். இப்பொழுது, அடுத்த இரு கணங்களில்.... (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 102. --யூதர் மற்றும் முதலாவது, ஒரு நாத்திகர் (சமய நம்பிக்கை அற்றவர்), அதன் பிறகு கர்த்தருக்காக இனிமையுடன் மனமாற்றமடைந்தார். அது சத்தியம் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? இயேசு தான் மேசியா என்று நீர் விசுவாசிக்கிறீரா-? நிச்சயமாக, நீர் விசுவாசிக்கிறீர். ஆமென். தேவன் உம்மை ஆசீர்வதிப்பாராக. 103. இப்பொழுது. இது உம்முடைய முதல் முறையாக இருக்கலாம். ஏதோவொரு நாளில், இஸ்ரவேலில் உள்ள, உமது ஜனங்களோடு போகும்படி நான் நம்புவது இங்கு தான் இருக்கிறது. 104. நீங்கள், "சகோதரன் பிரன்ஹாமே, நீர் உம்மைக் குறித்து மிகவும் நிச்சயம் உள்ளவராக இருப்பதாகத் தோன்றுகிறது" என்று கூறலாம். அவர் இங்கே இருக்கிறார் என்றும், அவர் வாக்குத் தத்தம் பண்ணி இருக்கிறார் என்றும் நான் அறிந்துள்ள காரணத்தினால் தான் இருக்கிறேன், நானல்ல. என்னுடைய வாக்கைக் காத்துக் கொள்வது நானல்ல; அவருடைய வாக்குத் தத்தத்தைக் காத்துக் கொள்வது அவர் தான். அப்படியே அவரை பரிசோதனையில் வையுங்கள். 105. இப்பொழுது, கர்த்தராகிய இயேசு, பரிசுத்த யோவான் 4ம் அதிகாரத்தில் அவர் செய்த, அதே காரியத்தை நடப்பித்து, செய்வார் என்றால், நீங்கள் எல்லாரும் சந்தோஷமாயிருந்து, இயேசு மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து விட்டார் என்றும், அவர் இன்றிரவு புறஜாதி சபையில் இருந்து, புறஜாதிகளிடம் அவர் நிறைவு செய்வதற்கு சற்று முன்பு, தம்முடைய அடையாளத்தையும், அற்புதத்தையும் கொடுத்துக் கொண்டிருக்கிறார் என்றும் அறிந்து கொண்டு, நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா-? (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] 106. இந்த மாகாணத்திலிருந்தோ, அல்லது இந்தப் பட்டணத்திலிருந்தோ அல்ல; இவள் வேறொரு பட்டணத்திலிருந்து வருகிறாள், இவள் கென்டக்கியிலிருந்து வருகிறாள். நீ எந்தப் பட்டணத்திலிருந்து வருகிறாய் என்றால், கென்டக்கியிலுள்ள புரூக்ஸ்வில் என்னப்படும் ஒரு பட்டணமாகும். உன்னுடைய முதல் பெயர் எல்லா. உன்னுடைய கடைசி பெயர் டோட் நீ நரம்பு சம்பந்தமான நோயினால் அவதிப்படும் காரணத்தினால் இங்கே இருக்கிறாய், உனக்கு இருதயக் கோளாறும் இருக்கிறது, மேலும் உனக்கு உயர் இரத்த அழுத்தம் உள்ளது; ஏனென்றால் மருத்துவர் உன்னுடைய கையைச் சுற்றிலும் ஏதோவொன்றைப் பொருத்துகிறார். அது மட்டுமல்ல, ஆனால் ஒரு பையனுடன் உன்னைக் காண்கிறேன், வீட்டில் சுற்றிலும் அவனை வழிநடத்த முயற்சித்துக் கொண்டிருக்கிறாய். அந்தப் பையன் உன்னுடைய மகனாய் இருக்கிறான், அவனுக்கு மூளைக்கோளாறு இருக்கிறது. அது தேவனாகிய கர்த்தர் உரைக்கிறதாவது. (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.] உன்னை அறிந்திருக்கிற ஏதோ ஓன்று இங்கே இருக்கிறது. உன்னுடைய விண்ணப்பத்தை அவர் உனக்கு அருளிச் செய்து விட்டார் என்று விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய முழு இருதயத்தோடும் விசுவாசிக்கிறாயா-? அப்படியானால் போய் அதைப் பெற்றுக்கொள். நீ அப்படியே போய் விசுவாசிப்பாயானால், நீ வேண்டிக் கொள்கிற எல்லாவற்றையும் நீ கொண்டிருக்க முடியும். (ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) 107. எப்படியிருக்கிறீர்கள், ஐயா-? நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாய் இருக்கிறோம் என்று நினைக்கிறேன். அது தான் என்றால், நாம் அப்படியே நம்முடைய கரங்களை உயர்த்துவோமா-? இப்பொழுது, பிலிப்பு சென்று, நாத்தான் வேலைக் கண்டு பிடித்த போது, அதைப் போன்ற ஒரு காரியம் இதோ இருக்கிறது. இது ஒரு மனிதன். உமக்கு என்ன கோளாறு இருக்கிறது என்றோ, அல்லது அந்த நிலையிலுள்ள ஏதோவொன்றை கர்த்தர் என்னிடம் கூறினால், நீங்கள் விசுவாசித்து, அதை ஏற்றுக்கொள்வீர்களா-? 108. ஐயா, உம்முடைய முக்கிய கோளாறு என்னவென்றால், ஒரு நரம்பு சம்பந்தமான வியாதியாக இருக்கிறது. அந்த நரம்புக் கோளாறானது உம்முடைய வயிற்றை முழுவதும் தொந்தரவு செய்து கொண்டிருக்கிறது. அதோடு கூட, உம்முடைய முதுகிலும் உம்முடைய தலையிலும் உமக்கு கோளாறு இருக்கிறது. அது உண்மை . [ஒலிநாடாவில் காலியிடம் - ஆசிரியர்.) நீர் ஓஹியோவிலுள்ள ஹாமில்டன் என்று அழைக்கப்படும் ஒரு பட்டணத்திலிருந்து வருகிறீர்கள். நீர் திரு. பார்க்கர். அது சரியே. உம்முடைய முதல் பெயர் ஹார்டிங்; திரு. ஹார்டிங் பார்க்கர். வீட்டிற்குத் திரும்பிச் செல்லுங்கள், இயேசு கிறிஸ்து உம்மைச் சுகப்படுத்தி விட்டார். 109. இப்பொழுது, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், சுகமடையுங்கள். 110. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். நாம் இப்பொழுது யாருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டிருக்கிறோமோ, அந்த தேவனாகிய கர்த்தர் நம் இருவரையுமே அறிவார். நீங்கள் இங்கே எதற்காக நின்று கொண்டிருக்கிறீர்கள் என்று கர்த்தர் எனக்கு வெளிப்படுத்துவாரானால், நீங்கள் அவரை விசுவாசிப்பீர்களா-? 111. முதலாவது உமக்கு நரம்புக் கோளாறு இருக்கிறது, மேலும் அது.... உமக்கு கழுத்தில் ஒரு - ஒரு வளர்ச்சி இருக்கிறது. அதைத் தவிர.. பாருங்கள், என்னால் அதைக் முடியாதிருந்தது. அது உங்களுடைய அங்கித் தொங்கலின் (skirt) கீழே தான் இருக்கிறது. நல்லது, நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் அறிந்து கொள்ளலாம், உங்களுக்கு இருதயக் கோளாறும் கூட இருக்கிறது. அது உண்மை . நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காக ஜெபிக்கப்படவும் ஆர்வமாக இருக்கிறீர்கள், அது உங்கள் மகன். அந்த மகன், அவனுக்கு என்ன தவறு இருக்கிறது என்றே உங்களுக்குத் தெரியவில்லை, மருத்துவருக்கும் அது தெரியவில்லை. ஆனால் அவன் சிறிது காலமாக மிகவும் வியாதிப்பட்டு உள்ளான், அவன் மிகவும் வியாதியாக இருக்கிறான். அவனுடைய அடிநாச் சதையை வெளியே எடுத்து விட மருத்துவர்கள் விரும்புகிறார்கள், ஆனால் நீங்கள் அதைக் குறித்து சற்று சந்தேகப்படுகிறீர்கள், ஏனென்றால் உண்மையிலேயே, ஒரு நரம்பு சம்பந்தமான வலிப்பு தான் அதற்குக் காரணமாக இருக்கிறது. பயப்படாதீர்கள், அவன் சுகமடைந்து விடுவான். போங்கள். 112. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர் அதை உங்களுக்கு அருளுவாராக. 113. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருக்கிறோம். தேவனாகிய கர்த்தர் நிச்சயமாகவே உங்களை அறிந்திருக்கிறார். நீர் இந்த நாட்டுப்புறத்திலிருந்து வரவில்லை. நீர் ஒரு கென்டக்கியன். நீர் ஒரு வயிற்றுக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். உமக்கு இருதயக் கோளாறும் கூட இருக்கிறது. உமக்கு தொண்டையில் இருக்கும் சிறிய கட்டிகளைப் போன்று, ஒரு தைராய்டு சுரப்பிக் கோளாறு இருக்கிறது. கர்த்தருடைய வார்த்தையை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நீங்கள் அவருடைய பிரசன்னத்தில் நின்று கொண்டு இருக்கிறீர்கள் என்று விசுவாசிக்கிறீர்களா-? அப்படியானால், அவரை உங்கள் சுகமளிப்பவராக ஏற்றுக் கொண்டு, உங்கள் பாதையில் சென்று, கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். 114. நாம் ஒருவருக்கொருவர் அந்நியர்களாக இருக்கிறோம். உங்களை எனக்குத் தெரியாது. நீங்கள் இந்த நாட்டுப்புறத்திலிருந்து வரவில்லை. நீங்கள் மிச்சிகனிலிருந்து வருகிறீர்கள். நீங்கள் இங்கே உங்களுக்காக இருக்கவில்லை. நீங்கள் வேறு யாரோ ஒருவருக்காக இங்கே இருக்கிறீர்கள், அது ஒரு மனிதனாக இருக்கிறது. அது உங்கள் உடன்பிறந்தவரின் மகன், அவன் மிச்சிகனில் இருக்கிறான். அவனுக்கு சற்று முன்பு ஒரு அறுவை சிகிச்கை நடைபெற்றது; மேலும் ஒரு அறுவை சிகிச்சையானது இரத்த உறைதலாக இருந்தது. அந்த இரத்த உறைதலுக்காக மருத்துவர் அறுவை சிகிச்சை செய்தார், அது ஏறக்குறைய அவனைத் திக்கற்றவனாக ஆக்கிவிட்டது, நான் அவனுக்காக ஜெபம் பண்ண நீங்கள் விரும்புகிறீர்கள். அது கர்த்தர் உரைக்கிறதாவது. சந்தேகப்படாதீர்கள், அவன் அதிலிருந்து வெளியே வந்து விடுவான். உங்கள் முழு இருதயத்தோடும் விசுவாசியுங்கள். 115. வாருங்கள். நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? நான் உங்களுக்கு ஒரு அந்நியனாக இருக்கிறேன். தேவனுக்கு உங்களைத் தெரியும், எனக்கோ தெரியாது. நீங்கள் நரம்புக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறீர்கள். அந்த நரம்பு பிரச்சனைக்கு காரணம் என்னவென்றால், உறுத்தல் உண்டாக்கும் ஸ்திரீகளுக்குரிய சுரப்பியின் காரணமாகத் தான். அது முற்றிலும் சரியே. நான் கர்த்தருடைய ஊழியக்காரன் என்று நீ அறிகிறாய், அது... இருந்த போதிலும், பேசிக் கொண்டிருப்பது நானல்ல. என்னுடைய சத்தம்: உனக்கும் கூட, நீ கவலைப்படுகிற ஒரு மகன் உனக்கு இருக்கிறான். அந்த மகனுக்கு ஒரு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மறுபடியும் அறுவை சிகிச்சை செய்ய அவர்கள் ஆயத்தமாக இருக்கிறார்கள். அந்தக் கைக்குட்டையை அவன் மேல் வையுங்கள், சந்தேகப்படாதீர்கள், அவன் குணமடைந்து விடுவான். 116. நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? தேவனிடத்தில் விசுவாசியுங்கள். சந்தேகப்படாதீர்கள். உங்களால் விசுவாசிக்கக் கூடுமானால். 117. இங்கே இருக்கையில் அமர்ந்திருக்கும், நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்-? அந்த ஸ்திரீ கடந்து செல்கிறாளே, அந்த கண்ணாடிகளை அணிந்து, அங்கே என்னைப் பார்த்துக் கொண்டு இருக்கிற அந்த மனிதர்: நான் அவருடைய ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசிக்கிறீர்களா-? உங்கள் கோளாறு என்னவென்று தேவனால் எனக்கு வெளிப்படுத்த முடியும் என்று விசுவாசிக்கிறீர்களா-? ஒருவருக்கொருவர் அந்நியர்களாயிருப்போமானால், உங்கள் கரத்தை மேலே தூக்கி நாம் வைத்திருங்கள். சரி, இப்பொழுது உங்களுடைய மூட்டுவாதத்திலிருந்து குணமடைய முடியும். பாருங்கள்-? 118. கேட்டுக் கொண்டிருக்கும் கூட்டத்தினர் இந்த விதமாகப் பார்த்து, விசுவாசிக்க வேண்டுமென்று விரும்புகிறேன். 119. அங்கே உங்களுக்கு அடுத்ததாக உட்கார்ந்து கொண்டிருக்கிற மனிதர், ஒரு மருத்துவமனைப் படுக்கை அல்லது ஏதோவொன்று மேலே உயருவதைக் காண்கிறேன். அங்கே ஒரு வெள்ளைப்படுக்கை இருக்கிறது. அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அது அவருடைய வயிற்றில் செய்யப்பட்டது. அது சரியே, ஐயா. அவருக்கு அடுத்து அமர்ந்திருக்கும் நீங்கள் தான். உமக்கு அடுத்து இருப்பது உமது மனைவி, ஏனென்றால் நீங்கள் ஒன்றாக வந்து கொண்டிருப்பதை நான் காண்கிறேன். அது சரியே. அவள் இருதயக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறான். அது முற்றிலும் சரியே. கணவன் மனைவியே, அங்கே நீங்கள் ஒருவர் மேல் ஒருவர் உங்கள் கரங்களை வையுங்கள். 120. ஓ தேவனாகிய கர்த்தாவே, பிசாசானவன் இதிலிருந்து கவனிக்கப்படாமல் இருந்து விடலாம் என்று பிசாசு நினைத்தான், ஆனால் நான் அந்தப் பிசாசை கடிந்து கொள்கிறேன். 121. கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில், அவர்களை விட்டு வெளியே வா. 122. இதோ, சரியாக இங்கே. இதோ ஒரு சீமாட்டி இருக்கிறார்கள். அவர்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்த ஆவியானவரை, அந்தப் பெண்மணியின் மேல் தொங்கிக் கொண்டு இருக்கிற ஒரு ஒளியை உங்களால் காண முடியவில்லையா-? அவர்கள் ஜெபித்துக் கொண்டு இருக்கிறார்கள், மேலும் அவர்கள்... அவர்களுக்கு ஸ்திரீகளுக்குரிய கோளாறு இருக்கிறது, அவர்களுக்கு இருதயக்கோளாறு இருக்கிறது, அவர்களுக்கு கொஞ்ச காலமாக தலைச்சுற்று இருக்கிறது. அங்கே உங்களுக்குத் தவறான நபர் இருக்கிறார். சற்று பொறுங்கள். இதோ, ஒரு நிமிடம் பொறுங்கள். அவர்களுடைய பெயர் பவுலின் ஷெப்பர்டு. செல்வி ஷெப்பர்டு அவர்களே, எழும்புங்கள், கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில் சுகமடையுங்கள். 123. ஓ, உங்களால் அவரைச் சந்தேகிக்க முடியுமா-? 124. பின்னால், வெளியேயுள்ள வரிசையில், அங்கே ஒரு சீமாட்டி, உட்கார்ந்து என்னையே பார்த்துக் கொண்டிருக்கிறாள். அவளுக்கு இரத்த சோகை வியாதி இருக்கிறது. சகோதரியே, நீ அதைக் குறித்த ஜெபித்துக் கொண்டிருக்கிறாயே, அந்த இரத்த சோகை நோயிலிருந்து தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுகப்படுத்துகிறார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? சரி, உன்னுடைய கரங்களை மேலே உயர்த்து. அது முடிந்து விட்டது. 125. மிகவும் பின்னால், உங்களுக்கு தெரிந்திருக்கலாம், உங்களுக்குப் பின்னால் ஒரு சீமாட்டி குடல் சம்பந்தமான கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். நீங்கள் எழும்புங்கள். 126. சரி. வயிற்றுக் கோளாறினால் அவதிப்பட்டுக் கொண்டிருக்கிற, அதற்கும் அப்பால் இருக்கும் சீமாட்டி, மிகவும் பின்னால் அவர்கள் இருக்கிறார்கள். ஒரு தொப்பியின் பக்கவாட்டில் ஒரு இறகு, ஒரு காரியம் இருக்கும் அந்தச் சிறு தொப்பியை வைத்துக்கொண்டு, அங்கே பின்னாலிருக்கும் சீமாட்டியே, எழுந்து நின்று, உங்கள் சுகத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். நீங்கள் சுகமானீர்கள். இயேசு கிறிஸ்து உங்களைச் சுகப்படுத்துகிறார். 127. நான் கேட்டுக் கொண்டிருக்கும் இக்கூட்டத்தினருக்கு, கர்த்தராகிய இயேசுவின் அன்பினால் நிறைந்த நாமத்தில் நான் சவால் விடுகிறேன். 128. வாலிப பெண்ணே, இங்கே உட்கார்ந்து கொண்டு என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாய்-? உனக்கு இருதயக்கோளாறும் காக்காய் வலிப்பும் இருக்கிறது. தேவனாகிய கர்த்தர் உன்னைச் சுகப்படுத்துவார் என்று நீ விசுவாசிக்கிறாயா-? நீ அவ்வாறு விசுவாசிப்பாயானால், உன்னுடைய கரத்தை உயர்த்து. சரி, உன்னால் அதைக் கொண்டிருக்க முடியும், அந்தச் சிறு சிவப்பு தலைமயிர் உடையவள். அதை விசுவாசி-! 129. இங்கே இருப்பவர்களைக் குறித்து என்ன-? தன்னுடைய தலையைத் தாழ்த்தியபடி, இங்கே உட்கார்ந்து ஜெபித்துக் கொண்டிருக்கும் இந்த சீமாட்டியைப் பாருங்கள், அவள் தன்னுடைய கரத்தை உயர்த்தி இருக்கிறாள், சிறிய சிவப்பு நிற மேல் சட்டையை (jacket) அணிந்து இருக்கிறாள். நான் அவருடைய தீர்க்கதரிசி என்று நீ விசுவாசிக்கிறாயா-? உன்னுடைய கழுத்திலும் உன்னுடைய தாடையிலும் கோளாறு இருக்கிறது. அது இப்பொழுது உன்னை விட்டுப் போய்விட்டது. நீ வீட்டிற்குச் சென்று சுகமாயிருக்க முடியும். 130. கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவை விசுவாசி. உங்களில் எத்தனை பேர்..-?. 131. அங்கே சக்கர நாற்காலியில் இருக்கும் உங்களைக் குறித்து என்ன-? நீங்கள் எல்லாரும், நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா-? 132. மீதியான மற்றவர்களைக் குறித்து என்ன-? நீங்கள் அதை விசுவாசிப்பீர்களா-? நீங்கள் ஒருவர் மேல் மற்றவர் கரங்களை வையுங்கள், தேவனுடைய இராஜ்யம் உங்கள் மேல் வருவதைக் காண்பீர்கள். பரிசுத்த ஆவியானவர் உங்களை இங்கே வழி நடத்தி இருக்கிறார். இப்பொழுது, உங்கள் கால்களை ஊன்றி எழுந்து நில்லுங்கள். தேவனுக்கு துதியையும் மகிமையையும் செலுத்துங்கள். 133. தேவனாகிய கர்த்தாவே, வானங்களையும் பூமியையும் சிருஷ்டித்தவரே, உமது ஆவியை அனுப்பி, இந்த முழு கூட்டத்தினரையும் சுகப்படுத்தும். 134. சாத்தானே, முழுவதும் தோல்வி அடைந்து விட்டாய். கர்த்தராகிய இயேசுவின் நாமத்தில்..., (உன்னைத் துரத்துகிறேன். *******